நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாட்டம்: சவூதி, அமீரகம், கத்தார் அறிவிப்பு

ஜித்தா: 

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள், மார்ச் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரமலான் பெருநாளை கொண்டாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசவையின் அறிக்கையின் படி, உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், மார்ச் 19-ஆம் தேதி வியாழக்கிழமை ரமலானின் இறுதி நாளாக இருக்கும் என்றும், அடுத்த நாள் பெருநாளாகக் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரக அதிபர் மன்றமும் வியாழக்கிழமை ரமலானின் நிறைவு நாளாக இருக்கும் என அறிவித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற பிறை காணும் குழு ஆய்வின் படி, அந்த மாலை ஷாவால் பிறை காணப்படாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கத்தாரின் மத விவகார அமைச்சகமும் வியாழக்கிழமை ரமலானின் 30-வது நாளாக இருக்கும் என்றும், வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset