செய்திகள் இந்தியா
இந்திய பட்ஜெட் மதிப்பீட்டில் 60 சதவீதம் நிதிப் பற்றாக்குறை
புது டெல்லி:
இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2022-23ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் கடந்த டிசம்பர் இறுதியில் 59.8 சதவீதத்தை எட்டியது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு:
அரசின் வருவாய்க்கும் செலவினத்துக்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் ரூ. 16.61 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9,92,976 கோடியாக இருந்தது.
அதாவது, பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 59.8 சதவீதத்தை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பட்ஜெட் மதிப்பீட்டில் 50.4 சதவீதத்தை நிதிப் பற்றாக்குறை எட்டியிருந்தது.
டிசம்பர் வரையிலான அரசின் நிகர வரி வருவாய் ரூ.15.55 லட்சம் கோடியாகும். இது, பட்ஜெட் மதிப்பீட்டில் 80.4 சதவீதமாகும். வரி அல்லாத வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டில் 79.5 சதவீதத்தை (ரூ.2.14 லட்சம் கோடி) அடைந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
