செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி
டர்பன்:
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 2-வது ஒருநாள் ஆட்டமும் புளூம்ஃபாண்டேனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80, மொயீன் அலி 51, பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்கள்.
இலக்கை விரட்டியபோது தென்னாப்பிரிக்காவின் முதல் நான்கு பேட்டர்கள் அபாரமாக விளையாடினார்கள்.
கேப்டன் பவுமா 102 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் 49 ரன்கள் எடுத்தார்.
கடைசிக்கட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியைக் கரை சேர்த்தார்.
தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 10:49 pm
மலேசியாவின் ஆறு தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை சிவசங்கரி நிறைவு செய்தார்
September 27, 2026, 6:33 pm
ஆசிய விளையாட்டு போட்டி: முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியதால் வெற்றியை இழந்த இந்திய ஸ்குவாஷ் இணை
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
