நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆஸ்திரேலிய டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா

மெல்பர்ன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  நடந்த இறுதிப்போட்டியில் தரவரிசையில் 25ஆவது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் . 

பரபரப்பான இந்தப் போட்டியில் முதல் சுற்றை எலினா ரைபகினா கைப்பற்றினார்.

பின்னர் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார். 

இதனால் 4 - 6, 6- 3, 6 - 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset