நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சந்தோஷ் நாராயணின் முதல் அனைத்துலக கலை நிகழ்ச்சி: மார்ச் 18 மலேசியாவில்

கோலாலம்பூர்:

சந்தோஷ் நாராயணின் முதல் அனைத்துலகக் கலை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறவுள்ளது.

தமிழ் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் சந்தோஷ் நாராயணனின் முதல் அனைத்துலகக் கலை நிகழ்ச்சி இதுவாகும்.

ரிட்ச் புரடக்‌ஷ்ன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 18ஆம் தேதி புக்கிட் ஜலில் Axiata அரங்கில் நடைபெறவுள்ளது.

360 டிகிரி வடிவமைப்பில் இந்தக் கலை நிகழ்ச்சிக்கான அரங்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அட்டக்கத்தி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகத்திற்குள் சந்தோஷ் நாராயணன் கால்பதித்தார்.

அதன் பின் ஜிகர்தண்டா, சூது கவ்வும், வடசென்னை, மெட்ராஸ், கபாலி, காலா, பைரவா என பல வெற்றி படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

அதே வேளையில் பல வெற்றி பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகத்தில் தமக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள சந்தோஷ் நாராயணனின் கலை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுவது அனைவரின் எதிர்பார்ப்பையும் ஈர்த்துள்ளது.

இந்தக் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆகவே ரசிகர்கள் http://t2u.asia/e/29850 எனும் அகப்பக்கத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை வாங்கலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset