நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாஜகவின் எதிர்ப்பையும் மீறி 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன: முன்பதிவில் அதிரடி காட்டும் ஷாருக்கானின் ‘பதான்’

மும்பை:

ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முன்பதிவில் மட்டும் இதுவரை 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. 

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘பதான்’ படத்தின் முன்பதிவு நடைபெற்று பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. 

தற்போது வரை உலகம் முழுக்க 2.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Pathaan (film) - Wikipedia

படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 40 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

முதல் வாரத்தில் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி அளவில் வசூலிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

முன்னனதாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் காவி நிற உடையில் தீபிகா தோன்றுவதாக பாஜகவினர் பிரச்சினையை கிளப்பினர்.

அழுத்தத்திற்கு ஆளான திரைப்பட தணிக்கை குழுவும் அந்த குறிப்பிட்ட பாடல் காட்சி குறித்து கேள்வி எழுப்பியது.

சினிமா ரசிகர்கள் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பாஜகவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமது கட்சியினர் இதுபோன்ற சர்ச்சைகளில் இப்போது ஈடுபட வேண்டாம். அது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும் என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாயின.

திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள், மறுஒலிப்பதிவு வேலைகள் முடிந்து உலகெங்கும் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் தேதி பதான் திரைக்கு வருகிறது.

- ரியாz 

தொடர்புடைய செய்திகள்

+ - reset