
செய்திகள் சிந்தனைகள்
தடுமாற்றத்தில் இந்திய சமுதாயம்: மாண்புமிகுக்கள் கவனிப்பார்களா?
கோலாலம்பூர்:
தேர்தல் முடிந்து சுமார் 50 நாட்கள் ஆகிறது.சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் மாநில ஆட்சிக்குழு மத்திய அமைச்சரவையில் இந்திய அமைச்சர்(கள்) துணை அமைச்சர்கள் நியமனங்களும் முடிந்துவிட்டன.
ஆனால், இன்றுவரை இந்திய சமுதாயம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பு எண்கள், அவர்களின் உதவியாளர்களின் தொடர்பு எண்கள் பொதுமக்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு வழங்குவதில் சம்பந்தப்பட்ட மாண்புமிகுகள் இன்னமும் அக்கறை காட்டாமல் அலட்சிய போக்கினை காட்டி வருகிறார்களா என்ற கேள்விகள் அங்குமிங்கும் எழ தொடங்கி விட்டன.
ஒருசில மாண்புமிகுகள் மட்டுமே மக்களின் நேரடி தொலைப்பேசி அழைப்பை எடுத்து பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது
மேலும் சில உதவியாளர்கள் (Pegawai-Pegawai Khas)களுக்கு தொலைப்பேசியில் அழைத்தால் அந்த அழைப்பை எடுப்பதே இல்லை என்றும், அப்படியே எடுத்து பேசினாலும் அலட்சியத்தன்மையை காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
பல உதவியாளர்கள் அவர்களே மாண்புமிகுகள் போல் நடந்து கொள்கிறார்கள். இது சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலைமையை நீடிக்க விடாமல் சம்பந்தப்பட்ட மாண்புமிகுகள் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி தங்களது தொடர்பு எண்களையும், உதவியாளர்களின் தொடர்பு எண்களையும் மின்னஞ்சல் முகவரியையும் நாளேடுகள்,சமூக ஊடகங்கள்வழி பகிரங்கப்படுத்த வேண்டுமென இந்திய சமுதாயத்தின் கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது.
எங்களுக்கு சேவை மையமும்,பணியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பிரச்சனை உள்ள மக்கள் வருவதற்கு முன்பு தொடர்பு கொண்டு வருவதற்கு சேவை மைய முகவரி, பொறுப்பாளர்(கள்) பெயர், சேவை மையத்தின் தொடர்பு எண் போன்ற விவரங்களும் மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சாதாரண வேலை செய்பவர்களுக்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.காரணம். அவர்கள் அடிக்கடி வந்து போக முடியாது. தொடர்பு வழிமுறைகள் இருந்தால் நேர காலத்தை நிர்ணயம் செய்து கொண்டு வருவதற்கு சுலபமாக இருக்கும்.
இந்த விவகாரத்தை லேசாக மாண்புமிகுகள் எடுத்துக் கொள்ளாமல் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க ஆவன செய்வார்கள் எந்று சமுதாயம் எதிர்ப்பார்க்கிறது.
- எம்.ஏ.அலி
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm