நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஏஐ ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடிக்கு கூகுள் ரூ.8 கோடி நிதியுதவி

புது டெல்லி: 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு  சென்னை ஐஐடிக்கு சுமார் ரூ.8.26 கோடி நிதியுதவியை கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

தில்லியில் கூகுள் ஃபார் இந்தியா வருடாந்திர நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றறது.

இதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கூகுள் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் சார்பில், சென்னை ஐஐடிக்கு  ரூ.8.26 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசுகையில், "இந்தியாவில் தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் சிறறப்பாக உள்ளது. இணையதளத்தில் 100க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்தும், அவரவர் குரல் வாயிலாகவும் தகவல்களை தேட வழிசெய்யும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

சிறு தொழில்கள், ஸ்டார்ட்அப்களுக்கு உதவி செய்து வரும் கூகுள் நிறுவனம், இணையவழி பாதுகாப்பில் முதலீடு செய்துள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சுந்தர் பிச்சை சந்தித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset