
செய்திகள் தொழில்நுட்பம்
விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைக்கக்கூடாது: இந்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு
புதுடெல்லி:
இந்தியாவில் 5ஜி சேவையை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெரும்பாலான இடங்களில் அந்த சேவை சரிவர இயங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் அதிவேகமான ஆற்றல் வீச்சினால் விமானக் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுரங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
December 20, 2022, 11:06 pm
ஏஐ ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடிக்கு கூகுள் ரூ.8 கோடி நிதியுதவி
November 29, 2022, 12:54 pm
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்
November 27, 2022, 5:39 pm
எதற்கும் லாயக்கில்லாதவன் இறுதியில் என்னவானான்? - லோகநாயகி ராமச்சந்திரன்
November 14, 2022, 5:51 pm
மந்தமாக இயங்கும் ட்விட்டர் தளம்: மன்னிப்பு கேட்டார் எலான் மஸ்க்
November 1, 2022, 2:52 pm
டுவிட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கும் கட்டணமா?
November 1, 2022, 11:46 am
8 மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியது
September 21, 2022, 8:21 pm
இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை
September 14, 2022, 6:30 pm
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலை குஜராத்தில் அமைகிறது
August 30, 2022, 11:28 am