செய்திகள் இந்தியா
கொலையாளிகள் 11 பேரின் முன் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு சீராய்வு மனு தாக்கல்
புதுடெல்லி:
தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தனது குடும்பத்தினரை படுகொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2002-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு ஹிந்துத்துவா கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-இல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர்களுக்கு, ஆளும் குஜராத் பாஜக அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
சர்ச்சைகள் வலுக்கவே குஜராத் உள்துறை கூடுதல் செயலர் ராஜ் குமார், “11 பேரும் ஏற்கெனவே 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர். சட்டப்படி ஆயுள் தண்டனை என்பது குறைந்தது 14 ஆண்டுகள் தண்டனை கொண்டதுதான். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அதன் பின்னர் தண்டனைக் குறைப்பு கோரலாம். ஆனால், அதை வழங்குவது தகுதியின் அடிப்படையில் அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும்” என்றார்.
இந்நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தனது குடும்பத்தினரை படுகொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 11 பேரையும் முன்கூட்டியே விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. பில்கிஸ் பானுவின் இரண்டு மனுக்களையும் ஒருசேர அதுவும் ஒரே அமர்வில் விசாரிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து தெரிவிப்பதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
