நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆன்லைன் சூதாட்ட சட்டம்: வழக்கம்போல் கவர்னர் இழுத்தடிக்கிறாரா?

சென்னை: 

ஆன்லைன் சூதாட்டம் தடைக்கான அவசர சட்டம் நேற்றோடு காலாவதியான நிலையில் நிரந்தர சட்டம் ஆளுநர் மேஜையில் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால் அவர் வழக்கம்போல் அதில் கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கிறார் என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளில் பணம் இழந்து பலரும் தங்கள் வாழ்வாதாராத்தை இழந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள் உயிரையே மாய்த்து கொண்டுள்ளனர். இதனைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 1ம் தேதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் வியாழக்கிழமை விளக்கம் கேட்கப்பட்டது. அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், அதற்கு அளவீடு என்னவென்றும் ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக சட்டத்துறை உரிய விளக்கத்தை 24 மணி நேரத்தில் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தின் காலக்கெடு நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் வழக்கம்போல் இந்த சட்டத்தை அமல்படுத்த கையெழுத்து போடாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset