
செய்திகள் தொழில்நுட்பம்
எதற்கும் லாயக்கில்லாதவன் இறுதியில் என்னவானான்? - லோகநாயகி ராமச்சந்திரன்
அந்த மாணவன் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில். ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
"என்னடா படிச்சே.. எப்போ பார்த்தாலும் ஏதாவது பாடத்தில் பெயில்!. இப்போ ஒரு பாடத்துல கூட பாசாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருப்பியா?"ன்னு
கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.
"இனி நீ படிக்க லாயக்கே இல்லை!" என்று டி.சி. கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.
"உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?" என்ற அந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சட்டென்று தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடிப் பார்த்தான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
அந்த நொடி அவனுக்கு ஒரு புதிய சிந்தனை உருவானது.
தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.
ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
அதன் பெயர் இயர் மஃப் (Ear muff)
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க அதை வாங்கினார்கள்
இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.
ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.
அந்தச் சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என நாட்டின் அதிகாரி உத்தரவிட்டார்.
போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.
கோடீஸ்வரனானான்.
அவர்தான் செஸ்டர் கீரின் வுட்.!.
மனதின் காயங்களும் நல்லது தான். சரியான முறையில் யோசித்தால் அதிலிருந்துகூட புதிய பாதைகள் கிடைக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
December 20, 2022, 11:06 pm
ஏஐ ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடிக்கு கூகுள் ரூ.8 கோடி நிதியுதவி
December 1, 2022, 12:35 pm
விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைக்கக்கூடாது: இந்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு
November 29, 2022, 12:54 pm
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்
November 14, 2022, 5:51 pm
மந்தமாக இயங்கும் ட்விட்டர் தளம்: மன்னிப்பு கேட்டார் எலான் மஸ்க்
November 1, 2022, 2:52 pm
டுவிட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கும் கட்டணமா?
November 1, 2022, 11:46 am
8 மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியது
September 21, 2022, 8:21 pm
இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை
September 14, 2022, 6:30 pm
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலை குஜராத்தில் அமைகிறது
August 30, 2022, 11:28 am