
செய்திகள் இந்தியா
குஜராத் வன்முறையாளர்களுக்கு உரிய பாடம் கற்பித்தோம்: அமித் ஷா
ஜலோட்:
குஜராத்தில் 1000 பேரை பலி கொண்ட 2002 கோத்ரா வகுப்புவாத வன்முறையாளர்களுக்கு சரியான பாடம் கற்பித்ததாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் அவர் கூறினார். குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத வன்முறை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இரு மதங்களுக்கு இடையே மட்டுமல்லாது, பல்வேறு சமூகத்தினர் இடையேயும் பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் துண்டிவிட்டது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியை அவர்கள் அதிகரித்துக் கொண்டனர்.
சமுகத்தின் ஒரு பிரிவினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் அநீதியை மட்டுமே இழைத்து வந்தது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையைத் தொடங்கியவர்கள் கூட காலம்காலமாக காங்கிரஸால் ஆதரிக்கப்பட்டு வந்தவர்கள்தான். காங்கிரஸ் கட்சி ஆதரவு இருக்கும் தைரியத்தில் அவர்கள் வன்முறையில் இறங்க தயங்குவதே இல்லை.
ஆனால், 2002ஆம் ஆண்டு வன்முறைக்குப் பிறகு, அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டது.
இதன் மூலம் அவர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டனர். அதன் பிறகு இப்போது வரை குஜராத்தில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை.
மத வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது பாஜக அரசு எடுத்த கடும் நடவடிக்கைகள் மூலம் இங்கு நிரந்தர அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார் அமித் ஷா.
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 5:57 pm
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
February 2, 2023, 3:52 pm
10 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பில்லை: பட்ஜெட்டில் ஏமாற்றம்
February 2, 2023, 2:34 pm
2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை
February 2, 2023, 1:08 pm
பான் கார்டு பொது அடையாள அட்டை
February 2, 2023, 12:59 am
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
February 1, 2023, 11:19 pm
மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
February 1, 2023, 11:08 pm
வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக அதிகரிப்பு
February 1, 2023, 4:14 pm
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
February 1, 2023, 4:06 pm