
செய்திகள் வணிகம்
மலேசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகம் 21% அதிகரித்துள்ளது: MITI தகவல்
கோலாலம்பூர்:
பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், மலேசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகமானது 21 விழுக்காடு அளவு அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மொத்த வர்த்கத்தின் மதிப்பு 245 பில்லியன் ரிங்கிட் எனத் தெரியவந்துள்ளதாக அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
ஆசியான் நாடுகள், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்தது.
இதன் மூலம் மொத்த வர்த்தக அளவின் வளர்ச்சி, விகிதமானது கடந்த 21 மாதங்களாக தொடர்ந்து இரட்டை இலக்கங்களில் பதிவாகி வருவதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
ஏற்றுமதி வர்த்தகமானது 15% அதிகரித்து, RM 131.63 பில்லியனாகப் பதிவாகி உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 15ஆவது மாதமாக வளர்ச்சி பதிவானது. இதேபோல் இறக்குமதி வர்த்தகமானது சுமார் 29 விழிஉக்காடு அதிகரித்து RM113.54 பில்லியாக உள்ளது.
"பெட்ரோலிய பொருள்கள், மின்னணுப் பொருள்கள், இயற்கை திரவ எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த ஏற்றுமதி மதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டின் மொத்த வர்த்தகத்தை நடப்பாண்டின் முதல் பத்து மாதங்களிலேயே முந்திவிட்டோம்," என அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் நாடு அனைத்துத் துறைகளிலும் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm