நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வாட்ஸ்ஆப் இந்திய பிரிவுத் தலைவர் ராஜிநாமா

புது டெல்லி:

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ், மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.

வருவாய் இழப்பு காரணமாக சர்வதேச அளவில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் அறிவித்த நிலையில், இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைவர் வில் கேட்ச்சார்ட் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.

வாட்ஸ்ஆப் இந்தியாவின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குநராக உள்ள சிவானந்த் துக்ரால் இனி மெட்டாவின் அனைத்து துணை நிறுவனங்களின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

கடந்த 2019 பிப்ரவரியில்தான் அபிஜித் போஸ் "வாட்ஸ்ஆப் இந்தியா' தலைவராக பொறுப்பேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset