
செய்திகள் கலைகள்
சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு துவங்கியது
சென்னை:
சூர்யா இந்த்ரஜித் பிலிம்ஸ் (SURYA INDRAJIT FILMS) சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகி வருகிறது.
அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம், ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.
20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்களிலும் திரைப்படங்களிலும் பணிபுரிந்த B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் கோவா, மலேசியா முதலாக பல இடங்களில் இப் படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கி படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm