நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அமெரிக்க பட விழாவில் விஜய்சேதுபதி நடித்த படம் திரையிட தேர்வு

நியூயார்க்:

அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 படங்களில் ஒன்றாக விஜய்சேதுபதியின் மாமனிதன் படமும் இடம்பெற்றுள்ளது.

நவம்பர் 20-ஆம் தேதி விருது பெற்ற படம் குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளனர். 

மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதியும் காயத்ரியும் ஜோடியாக நடித்து இருந்தனர். 

இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். 

இதுகுறித்து  சீனுராமசாமி கூறும்போது, 

''அர்பா சர்வதேச திரைப்பட விழாவானது 25-ஆவது ஆண்டாக நடக்கிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடக்கும் புகழ் பெற்ற இவ்விழாவில் திரையிடப்படும் ஐந்து படங்களில் ஒன்றாக விஜய்சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம் திரையிட தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு குழுவினருக்கு நன்றி'' என்றார். 

ஏற்கனவே மாமனிதன் படம் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆசியப் படத்துக்கான தங்க பதக்கம் விருதையும் பூடான் நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு 4 விருதுகளையும் சிங்கப்பூர் பட விழாவில் திரையிடப்பட்டு 4 விருதுகளையும் பெற்றுள்ளது. 

மாமனிதன் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset