செய்திகள் மலேசியா
அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவுக்கு பெரிய பிரச்சினை ஏதுமில்லை: ஃபுவாட் ஸர்காஷி
கோலாலம்பூர்:
அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவுக்கு பெரிய பிரச்சினை அல்லது விவகாரம் ஏதும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்கிறார் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் ஃபுவாட் ஸர்காஷி.
கடந்த பொதுத்தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வாக்காளர்களைக் கவர 1எம்பிடி முறைகேட்டையே பெரிதும் நம்பியிருந்தது என்றார் அவர்.
நடப்பு அரசாங்கத்தைக் குற்றம்சாட்டுவதற்கு எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லாத காரணத்தால்தான் எதிர்க்கட்சிகள் 15ஆவது பொதுத்தேர்தலை தாமதமாக நடத்த ஆதரவு தெரிவிப்பதாக ஃபுவாட் ஸர்காஷி கூறினார்.
"கடந்த தேர்தலில் இதுபோன்ற தந்திரங்களைக் கையாண்டு, 1எம்டிபி முறைகேட்டுடன் தொடர்புடைய எதிர்மறை கருத்துகளை எதிர்க்கட்சிகள் பரப்பின.
"எனினும் மக்கள் அறிவார்ந்தவர்கள். மீண்டும் ஏமாற மாட்டார்கள். கடற்படைக்கான போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான விவகாரத்தையும் 1எம்டிபி முறைகேட்டைப் போல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் எதிர்க்கட்சிகள் தோல்வி கண்டுள்ளன," என்றார் ஃபுவாட் ஸ்ர்காஷி.
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
