
செய்திகள் இந்தியா
பிகாரில் 100 ஆண்டுகள் பழமையான சுல்தான் மாளிகை இடிக்க உயர்நீதிமன்றம் தடை
பாட்னா:
பிகார் தலைநகர் பாட்னாவில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டும் மாநில அரசின் திட்டத்துக்காக 100 ஆண்டுகள் பழமையும் வரலாற்றுசிறப்பும் வாய்ந்த சுல்தான் மாளிகையை இடிப்பதற்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்டக் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்குரைஞர் சர் சுல்தான் அகமதுவால் 1922இல் கட்டப்பட்ட இம்மாளிகை அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் 5 நட்சத்திர விடுதி கட்டப்படும் என்று மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
நட்சத்திர விடுதி கட்டுவதற்காக, சுல்தான் மாளிகையை இடிக்கும் முடிவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்பரியச் சின்னங்களின் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பு கருத்துகள் வேகமாக பரவின.
இதையடுத்து, சுல்தான் மாளிகையை இடிக்க தடை விதித்த நீதிபதிகள், 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மாளிகையை இடிக்க முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து 8 வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am