நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஹின்யா அகதிகள் குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள ரோஹின்யா அகதிகள் இங்கு வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சின் அறிக்கைக்காக தமது  அமைச்சு காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்றார்.

"நாட்டில் தற்போது பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். நிலைமையின் தீவிரத்தை நானும் உணர்ந்துள்ளேன்.

"எனினும் தேசத்தின் பாதுகாப்பு என்று வரும்போது அதில் சமரசத்துக்கு இடமில்லை. எனவே இதுகுறித்து ஆராயும் பொறுப்பை உள்துறை அமைச்சிடமே விட்டுவிடுகிறேன்.

"ரோஹின்யா அகதிகளை வேலை பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் மேலும் பல அகதிகள் இங்கு வர விரும்புவார்கள்.

"அனைத்துலக கடற்பகுதிகளில் ஏராளமான ரோஹின்யா அகதிகளுடன் சில பறவைகள் மாதக்கணக்கில் காத்திருப்பதாக அறிகிறேன்.

"அவையெல்லாம் கண்சிமிட்டும் நேரத்துக்குள் மலேசிய கடல் எல்லைக்குள் நுழைந்துவிடும்.

"மலேசியாவுக்குள் நுழையும் இந்த அகதிகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு மூன்றாம் நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை," என்று மனிதவள அமைச்சர்  டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் 103,090  ரோஹின்யா அகதிகள் இருப்பதாக அகதிகளுக்கான ஐநா ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset