நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி: போராடி தோற்றார் நடால்

பிரிட்ஜ் டவுன்:

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

குரேஷியாவின்  போர்னா கோரிக்குடன்  2ஆவது சுற்றில் மோதிய நடால் (7-9), 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 2 மணி, 51 நிமிடம் போராடி தோல்வியைத் தழுவினார்.

விம்பிள்டன்  அரையிறுதிக்கு முன்னேறியும், காயம் காரணமாக விளையாடாமலேயே நடால் வெளியேறினார்.

சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய போட்டியில் போராடி தோற்றாலும், அமெரிக்க  கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர் மற்ற வீரர்களுக்கு அறைகூவலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

டானில் மெத்வதேவ் (ரஷ்யா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), கேமரான் நோரி (இங்கிலாந்து), ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset