நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

4,000 T20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா சாதனை 

விசாகப்பட்டினம்:

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.

விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 25 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார். இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 ஆட்டத்தில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

குறைந்த பந்துகளைச் சந்தித்து 4000 ரன்களைக் குவித்த வீராங்கனையாக மந்தனா உருவெடுத்துள்ளார். மந்தனா 3,227 பந்துகளில் 4,000 டி20 ரன்களைக் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைப் பட்டியலில், நியூஸிலாந்து வீராங்கனை சுஸீ பேட்ஸ் 4,716 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset