நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஹமீத் குர்கா காலமானார்

கோலாலம்பூர்:
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் அப்துல் ஹமித் அப்துல் ரஹ்மான் (Abdul Hamid Ab Rahman) காலமானார்.

Hamid Gurkha என்ற பெயரில் பிரபலமான அவர், முதுமை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 89.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது தந்தை காலமானதாக ஹமித் குர்காவின் மகள் நோராஸியான் (53 வயது) தெரிவித்தார்.

துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அவர் தன் இறுதி மூச்சை சுவாசித்ததாக குறிப்பிட்ட நோராஸியான், நோன்பு பெருநாள் முதற்கொண்டே தனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வந்ததாகவும், கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஹமித் குர்காவுக்கு 80 வயதான மனைவி டிமா ஹமித், ஆறு குழந்தைகள், 32 பேரக்குழந்தைகள், 17 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

அவரது நல்லடக்கம் கோத்தா ராஜா பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset