நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கவிஞர் வைரமுத்துக்கு ஓஎன்வி விருது

திருவனந்தபுரம்: 

கவிஞர் வைரமுத்துவுக்கு கேரளத்தின் 5-ஆவது ஓஎன்வி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம் இல்லாத பிறமொழி கவிஞர் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த விருதுடன் சேர்த்து ரூ. 3 லட்சத்துக்கான ரொக்கமும், பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

2016-இல் மறைந்த கேரளத்தின் பிரபல கவிஞர் ஓஎன்வி குரூப்யின் நினைவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

மலையாள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அனில் வள்ளாதால், கவிஞர்கள் அலன்கோட் லீலாகிருஷ்ணன், பிரபா வர்மா ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் வைரமுத்துவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர் என பல்வேறு துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக சாதனைப் படைத்தவர் வைரமுத்து என்று தேர்வுக் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

கவிஞர் வைரமுத்து பத்ம பூஷண் உள்பட ஏழு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஓஎன்வி யுவ சாஹித்ய புரஷ்கார் விருது பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலால் இந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை என்று காரணம் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள விருது வழங்கும் தேதியும் பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset