நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

'மதராசா' என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சைக்குரிய பேச்சு 

கவுகாத்தி:

முஸ்லிம்களின் குழந்தைகள் தங்கள் மத போதனைகளை கற்றுக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட மத ரீதியிலான கல்வியியல் அமைப்பே 'மதராசா' ஆகும். மதராசா என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று சர்ச்சைக்குரிய கருத்தை அசாம் முதல் அமைச்சர்  ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்

மதராசாக்களை நீக்கிவிட்டு அவற்றை பொதுவான பள்ளிக்கூடங்களாக மாற்ற அசாம் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மதராசா என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிஸ்வா:- 'மதராசா' என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மதராசா என்ற இந்த வார்த்தை இருக்கும் வரை டாக்டர், என்ஜினியராவது குறித்து முஸ்லிம் குழந்தைகளால் சிந்திக்க முடியாது. 

மதராசாக்களில் படித்தால் நீங்கள் டாக்டர், என்ஜினியர்களாக முடியாது என குழந்தைகளிடம் கூறினால் அவர்களே மதராசா பக்கம்  செல்லமாட்டார்கள். 

முஸ்லிம்கள் உங்கள் குழந்தைகளுக்கு குர்ஆன் கற்றுக்கொடுங்கள். ஆனால், அதை உங்கள் வீட்டில் வைத்து கற்றுக்கொண்டுங்கள். மதசாராக்களில் குழந்தைகள் சேர்க்கப்படுவது அந்தக் குழந்தைகளின் மனித உரிமைகளுக்கு எதிரானது. 

அறிவியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களிலில்தான் அழுத்தம் இருக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் பொதுவான கல்வி இருக்க வேண்டும். மதம் சார்ந்த பாடங்கள் வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டும். 

ஆனால், பள்ளிக்கூட்டங்களில் அவர்கள் ( இஸ்லாமிய மாணவ/மாணவிகள்) டாக்டர், என்ஜினியர், பேராசிரியர், விஞ்ஞானியாவது எப்படி என்பது குறித்து கற்க வேண்டும். அனைத்து இஸ்லாமியர்களும் இந்துக்கள் தான். 

இந்தியாவில் இஸ்லாமியராக யாரும் பிறக்கவில்லை. இந்தியாவில் அனைவரும் இந்துக்கள் தான். ஒரு இஸ்லாமிய குழந்தை மிகவும் திறமையாக இருந்தால் நான் அந்த குழந்தையின் முந்தைய இந்துவுக்கும் சிறிது நன்றி செலுத்துவேன்' என்று சர்ச்சைக்குரிய முறையில் ஒரு மாநில முதல்வரே பேசி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே, உத்தர பிரதேசத்தில் மதக் கலவரங்களும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிவாசல்களை நோக்கி தங்களது பார்வையை திரும்பியுள்ளன பாஜக ஆளும் மாநில அரசுகள். நாட்டில் பணவீக்கம் தலை விரித்தாடும் நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் அனைத்து செயல்களையும் ஆளும் பாஜக செய்து வருவதாக நடுநிலையாளர்களும் அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றார்கள்.

இலங்கையை போல் இந்தியா ஆகும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்று பொருளாதார நிபுணர்களும் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்களும் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset