நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை வன்முறை: 3 எம்.பி.க்களிடம் விசாரணை

கொழும்பு:

இலங்கையில் மே 9ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக மேலும் மூன்று ஆளும்கட்சி எம்.பி.க்களிடம் காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கையில் அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது கடந்த மே 9ஆம் தேதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Sri Lankan police arrests ruling party MPs over mob violence | Inquirer News

இந்த வன்முறை தொடர்பாக 1,059 பேரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தனி நபர் 15,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு வெளிநாட்டு கரன்சியை வைத்திருக்கலாம் என்ற வரம்பு 10,000 அமெரிக்க டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset