நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு 

கியேவ்: 

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்யா படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்நகரின் தொலைக்காட்சி கோபுரம் தகர்க்கப்பட்டது. 

கார்கிவ் மக்களை அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா படைகள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக தொலைக்காட்சி கோபுரம் தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கூறினார். 

ரஷ்யா நாட்டின் பயங்கரவாதத்தை வெளிகாட்டுவதுடன் நகர மக்களுக்குத் தகவல்கள் சென்று சேர்வதைத் தடுக்க அந்த நாடு முயல்வதாக செலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார். 

கார்கிவ் நகரில் அடிக்கடி ரஷ்யா படையினரால் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமும் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. 

இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset