நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறையில் கல்வி: 87 வயதில் +2 தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வர்

சண்டீகர்:

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 87-ஆவது வயதில் பிளஸ் 2 தேர்ச்சிபெற்றார்.

ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கல்வியைத் தொடங்கி தற்போது 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சண்டீகரில் உள்ள மாநில பள்ளிக் கல்வி வாரியத்திடம் இருந்து அவர் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு அவர் 12-ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். ஆனால், அதற்கு முன்பு 2017-இல் தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் எழுதிய 10-ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் இருந்ததால், அவரது 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவை மாநில பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து, அவர் 10-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வில் மீண்டும் பங்கேற்றார். அதில் அவர் 100-க்கு 88 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவரது 12– ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், அவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான செளதாளா ஹரியாணா முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார்.

ஹரியாணாவில் ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, தில்லி திகார் சிறையில் இருந்தபோதுதான் சௌதாலா 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset