நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தானிஷ் சித்திக்கி உள்பட 4 புகைப்பட கலைஞர்களுக்கு புலிட்ஸர் விருது

நியூயார்க்:

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தானிஷ் சித்திக்கி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 4 புகைப்படக் கலைஞர்களுக்கு "புலிட்ஸர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைத் துறையில் சிறப்பாகச் செயல்படுவோருக்கும், எழுத்து, இசை, நாடக உலகில் முக்கியப் பங்காற்றுவோருக்கும் "புலிட்ஸர்' விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டுக்கான விருதுப் பட்டியல் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர்களான 4 இந்தியர்களுக்கு "ஃபீச்சர் ஃபோட்டோகிராபி' பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் இந்தியாவின் நிலைமையைப் புகைப்படங்கள் வாயிலாக வெளி உலகுக்கு காட்டியதற்காக அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Danish Siddiqui's 10 powerful images that tell a story | His finest  pictures - India News

Reuters Photographer Danish Siddiqui Killed in Afghanistan - The New York  Times

Pulitzer Prize for Danish Siddiqui photos of India's covid trauma — Quartz  India

தானிஷ் சித்திக்கியின் உலகப் பிரசித்திப்பெற்ற படங்கள் 

தானிஷ் சித்திக்கி, அத்னான் அபிதி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் தவே ஆகியோர் புலிட்ஸர் விருதைப் பெறுகின்றனர்.

தானிஷ் சித்திக்கி புலிட்ஸர் விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே ரோஹிங்கியா அகதிகள் நிலை குறித்து பதிவு செய்ததற்காகக் கடந்த 2018ஆம் ஆண்டில் அவர் புலிட்ஸர் விருதைப் பெற்றிருந்தார்.

ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட ஆசியா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த பல்வேறு விவகாரங்களைத் தனது புகைப்படங்கள் வாயிலாக சித்திக்கி பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset