நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

"தமிழ்க் கதைச் சொல்லி கி. ராஜநாராயணன்": சர்வதேச தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்ற உரையரங்கம்

துபாய் :

புதுச்சேரி ஆளுமைசார் பயிற்சி பயிலகமான 'தி சென் அகாடமி' ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

21-05-2021 அன்று உரையரங்கம் நடத்தியது. "உழைப்பால் உயர்ந்த ஆளுமைகள்" என்ற தலைப்பிலும் "தமிழ் கதை சொல்லி கி. ராஜநாராயணன்" அவர்களை குறித்து உரையரங்கம் நடைபெற்றது.

இதில் திருச்சி கவிச்சுடர் ஸ்ரீரங்கன் வரவேற்புரை நல்க, முனைவர் தமிழ்ச்செல்வி குணசேகரன் சிறப்புரை வழங்கினார். பிரான்ஸிலிருந்து பாவலர் பத்திரிசியா பாப்பு அவர்களும் அபுதாபியிலிருந்து கவிஞர் கீதா ஸ்ரீராம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குழந்தை பேச்சாளர் புவனேஸ்வரி, மாணவி தேஜஸ்வினி கோவை மாணவர் ராம்குமார் ஈரோடு பழனிச்சாமி, காரைக்குடி முனைவர் சபிதா பானு, மதுரை தமிழ்மகள் ஹேமவர்தினி  இராமநாதபுரம் ஆசிரியர் தமயந்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சமீபத்தில் மறைந்த தமிழ் ஆளுமை கதைச் சொல்லி கி. ராஜநாராயணன் அவர்களது நினைவேந்தலை முன்நிறுத்தி முதுகுளத்தூரில் இருந்து திரு சோலைராஜா மதுரையிலிருந்து கவிஞர் நித்தியகல்யாணி வேம்பாரிலிருந்து கவிஞர் செலஸ்டின் மகிமை ராஜ், பர்னபாஸ் பாக்கிய மார்சலோ திருமுல்லைவாயிலிலிருந்து திருமதி விஜய சாமுண்டீஸ்வரி, மாணவர் அழகுராஜா ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
வாழ்த்துரையை திருமதி பூங்கொடி துரைசாமி நிகழ்த்த நன்றியுரை ஆற்றினார் கவிச்சுடர் அழகுவேல்.

இதனை அழகுற தொகுத்து வழங்கினார் புதுச்சேரி கவிஞர் விஜயகுமார்.

தி சென் அகாடெமி இயக்குனர் முனைவர் கவிதா செந்தில்நாதன் முன்னிலை வகிக்க துபாயிலிருந்து முனைவர் முகமது முஹைதீனும்  ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்தும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வை தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி நேரலையாக ஒளியேற்றியது. இதனை மீண்டும் காண விரும்பினால் கீழ்க்காணும் இணைப்பினை சொடுக்குக.

https://youtu.be/M7tS_JqsswQ

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset