செய்திகள் கலைகள்
இறைவன் கொரானா என்ற படத்தை ரிலீஸ் செய்திருக்கிறான்; அதை வீட்டுக்குள் இருந்தே பாருங்கள்: வைகைப்புயல் வடிவேலு
சென்னை:
மனித வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், கஷ்டங்களைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக்கி நடித்த நடிகர் வடிவேலு, கொரோனா காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு பற்றி நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கொரோனாவால் பீதி ஏற்பட்டுள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக் கூடாது. கைகொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை. என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும்.
ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படமாகத்தான் செய்தேன். ஆனால், உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணரவைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதைக் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வராமல், தொட்டு பேசாமல் வெல்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
