நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் கோவில்பட்டியில் சிலை, நினைவரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: 

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த கரிசல் குயில் கி.ரா.வுக்கு அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என கூறினார். கி.ரா. படித்த இடைசெவல் ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறினார். கி.ரா. நினைவை போற்ற அவரது புகைப்படங்கள், படைப்புகளுடன் ஓர் அரங்கம் நிறுவப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  

எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு மற்றும்  உடல்நிலை பாதிப்பால் நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல் இன்று  மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படுகிறது. 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். 

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். 

கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ரா. அவருக்கு புகழஞ்சலி என கமல் இரங்கல் தெரிவித்தார். நூற்றாண்டு கொண்டாடுவார் என எதிர்நோக்கியிருந்த நேரத்தில் கி.ரா மறைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என ராமதாஸ் இரங்கல் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset