நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோத்தா கமுனிங்:

மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் இதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்று மஇகா துணைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா, எம்ஐஇடி ஏற்பாட்டிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கோத்தா கமுனிங்கில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள், கட்சியின்  முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்தார்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களின் அழைப்பை ஏற்று பிரதமர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

மேலும் தீபாவளி இந்துக்களின் பெருநாளாக இருந்தாலும் மலேசியாவை பொறுத்த வரையில் பல்லின மக்கள் கொண்டாடும் விழாவாக விளங்குகிறது.

பிரதமரின் வருகை இதனை நிரூபிக்கிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இவ்வேளையில் தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் என் குடும்பத்தினர் சார்பில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சியுடனும் குடுப்பத்தாருடன் ஒற்றுமையாக இத்தீபாவளி பெருநாளை கொண்டாடுமாறு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset