செய்திகள் மலேசியா
அமைச்சர்கள் தீபாவளி வாழ்த்து: ஒற்றுமையைக் காக்க அழைப்பு
கோலாலம்பூர்:
தீபாவளியை முன்னிட்டு அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்து, ஒற்றுமையைப் பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
கல்வி அமைச்சர் பத்லினா சிடெக், இந்த பண்டிகை குடும்ப பிணைப்பை வலுப்படுத்தும் என்றும், அனைத்து இந்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் கிடைக்க வாழ்த்துவதாகவும் கூறினார்.
சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத், பண்டிகை காலம் இனங்களுக்கு இடையே உறவை வளர்க்க சிறந்த வாய்ப்பு என்றார்.
இளைஞர், விளையாட்டு அமைச்சர் முஹம்மது தவ்ஃபிக் ஜோஹாரி, சொந்த ஊர் திரும்பும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, கலாச்சார, மத பன்முகத்தன்மையை ஏற்று ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்றார்.
உள்நாட்டு வர்த்தக அமைச்சர் அர்மிசான் முஹம்மது அலி, ஒற்றுமை, நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவையே பல்லின சமூகத்தின் அடித்தளம் என்றார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், தீபாவளி என்பது இருளை விட ஒளி வெல்வது மட்டுமல்ல, உயர்ந்த மதிப்புகளின் நினைவூட்டல் என்றார்.
தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன், பண்டிகை மகிழ்ச்சி தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றார்.
பேராக் மந்திரி பெசார் சாரானி முஹம்மது, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 8, 2026, 4:41 pm
தீபாவளி உற்சாகம்: சபா, சரவாக்கில் ஒற்றுமை பிரகாசித்தது
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:43 pm
