செய்திகள் உலகம்
அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி: "இப்போதும் டிரம்ப்தான் உங்கள் அதிபர்"; வெள்ளை மாளிகை வெளியிட்ட சர்ச்சைப் பதிவு
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ 'ரெஸொல்யூட்' மேஜையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளது.
அதனுடன், "பொதுமக்களுக்கான அறிவிப்பு: டிரம்ப் இன்னமும் அமெரிக்காவின் அதிபர்தான்" என்ற வரிகளையும் பதிவிட்டுள்ளது. இப்பதிவு தற்போது அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சட்ட திட்டங்களுக்குக் காத்திருக்கும் முட்டுக்கட்டை
இதுவரை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் குடியரசுக் கட்சியே குறைந்த அளவிலான பெரும்பான்மையைக் கொண்டிருந்தது.
தற்போது ஜனநாயகக் கட்சி இரு அவைகளையும் தன் வசமாக்கியுள்ளதால், அதிபர் டிரம்பின் சட்ட முன்வரைவுகள், வரி சீர்திருத்தங்கள் மற்றும் முக்கியக் கொள்கை முடிவுகளுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போர்க் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் இனி விரிவான விசாரணைகளை நடத்த வழிவகுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 4:36 pm
முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல் எல் சையத்: கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவரது மனைவி
November 5, 2026, 4:26 pm
தோல்வியடைந்த டிரம்ப் கட்சிக்காக450 மில்லியன் டாலர் செலவு செய்த எலான் மஸ்க்
November 4, 2026, 5:47 pm
அமெரிக்காவின் செனட் சபைக்குத் தேர்வாகும் முதல் முஸ்லிம் அப்துல் எல்-சயீத்
November 3, 2026, 11:18 am
8 நாடுகளில் உள்ள பேரங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் குறிவைக்கும் இணையத் தாக்குதல்
November 2, 2026, 4:01 pm
தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
November 2, 2026, 10:19 am
ஃபுளோரிடாவில் தனியார் விமானம் ஒன்று விழுந்து விபத்து: 9 பேர் பலி
November 1, 2026, 7:14 pm
