செய்திகள் மலேசியா
அன்பு இல்ல பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்; அன்பைப் பகிர்ந்து, அழகிய நினைவுகளை உருவாக்குவோம்: பிரகாஷ்
கோத்தா கமுனிங்:
தீபாவளியை முன்னிட்டு, கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜம்புநாதன் அன்பு இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வரும் சிறார்களுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறுவர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அவர்களுக்குப் புதிய ஆடைகள் வாங்கித் தந்தார்
மேலும் அனைவரும் ஒன்றாகக் கடல் உணவு உணவகத்தில் இரவு உணவருந்தி மகிழ்ந்தனர்.
சிறார்களுடன் கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்களையும் கதைகளையும் கேட்டறிந்து, அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டதுடன், தீபாவளி அன்பளிப்பாகப் பணமும் வழங்கினார்.
மேலும் சில நேரங்களில், நாம் வழங்கும் அன்பளிப்பின் மதிப்பைவிட, அவர்களுடன் செலவிடும் நேரமும், காட்டும் அக்கறையும், பகிர்ந்துகொள்ளும் அன்புமே மிகவும் மதிப்புமிக்கதாக அமைகின்றன என்று அவர் கூறினார்.
இந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அன்பான வரவேற்பையும் ஆதரவையும் வழங்கிய Raaji Silk Palace நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், உள்ளூர் வணிகர்களிடமிருந்து ஆடைகளை வாங்குவதும், உள்ளூர் உணவகத்தில் உணவருந்துவதும் நமது சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முயற்சியாகும்.
இந்தத் தீபாவளி அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி, அன்பு, நம்பிக்கை மற்றும் இனிய நினைவுகளை நிறைத்திடட்டும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று பிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 10:56 pm
வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டதால் மலாக்காவில் பிரச்சாரத்தை ரத்து செய்தார் ரபிசி
November 2, 2026, 10:55 pm
மலாக்கா மாநிலத் தேர்தலைப் புறக்கணித்ததாகக் கூறப்படுவதை எம்ஐபிபி மறுத்துள்ளது
November 2, 2026, 10:54 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்
November 2, 2026, 5:27 pm
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெனாய் ஆலாம், TTDI ஆகியவையும் அடங்கும்
November 2, 2026, 5:26 pm
ஹாங்காங்கிற்கு கொக்கைன் போதைப் பொருட்களை கடத்த சீன நாட்டினர் கடத்துபவர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்
November 2, 2026, 4:56 pm
ஜொகூர் பாருவில் கேடிஎம்பி (KTMB) சரக்கு ரயிலில் தீ விபத்து: உயிர்ச்சேதம் ஏதுமில்லை
November 2, 2026, 4:43 pm
ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பணிக்கு டத்தோஸ்ரீ சுஹாய்லி மீண்டும் திரும்பியுள்ளார்
November 2, 2026, 4:42 pm
இரண்டு பிள்ளைகளை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் குறித்து போலிஸ் விசாரணை
November 2, 2026, 4:41 pm
