நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலை சரிந்து விழுந்தது 5 வாகனங்கள் சேதமாகின

கோலாலம்பூர்: 

சாலை சரிந்து விழுந்தது 5 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று மாலையில் செர்டாங் ஜாலான் எல்பி 1ஏ/2 லெஸ்தாரி பெர்டானாவில் நிகழ்ந்தது.

கார் பழுது பார்க்கும் பட்டறைக்கு முன் பகுதியில் உள்ள சாலை திடீரென சரிந்து விழுந்தது.

இதனால் அப் பட்டறைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சாலையுடன் சரிந்து கால்வாயில் விழுந்தது.

இச் சம்பவத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்தது. மற்றப்பட்டி மக்கள் யாரும் பாதிக்கவில்லை என்று செர்டாங் மாவட்ட தீயணைப்பு படையில் துணைத் தலைவர் ஷாருடின் ஷபாருடின் கூறினார்.

சாலை சரிந்து விழுந்த பகுதி தற்காலிககமாக மூடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset