நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை முருகன் ஆலயம் போன்று ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானமும் உலகப் புகழ் பெற வேண்டும்: குணராஜ்

பத்துமலை:

பத்துமலை முருகன் ஆலயம் போன்று 
ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானமும் உலகப் புகழ் பெற வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானம் மலேசிய சபரிமலை என பெருமையாக சொல்லும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 45 ஆண்டுக்கால முயற்சிக்கு பின் இவ்வாலயம் தற்போது மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது.

பத்துமலை முருகன் ஆலயத்திற்கு அடுத்து இவ்வாலயமும் உலகப் புகழ் பெற வேண்டும்.

இவ்வேளையில் யுவராஜா குருசாமி தலைமையிலான நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இன்றைய மண்டல பூஜையில் கலந்து கொண்டது பாக்கியமாக கருதுகிறேன்.

இப்பூஜைக்கு பின் பல பக்தர்கள் சபரிமலைக்கு சொல்வார்கள். அவர்களுக்கு ஐயப்பசுவாமி துணை இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குணராஜ் கூறினார்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தினர் ஆலய வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டுள்ளனர்.

அத்திட்டங்களுக்கு முழு ஆதரவு தருவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset