செய்திகள் மலேசியா
9 ஆண்டுகளாகியும் மெங்கிபோல் தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை: சிவமலர் கணபதி கேள்வி
கோலாலம்பூர்:
ஜொகூர் குளுவாங்கில் அமைந்துள்ள மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான நில விவகாரம், 2017ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கெஜட்டில் அறிவிக்கப்பட்ட பின்னரும் இதுவரை தீர்க்கப்படவில்லை.
இதற்கான காரணம் என்னவென்று என்று கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகள் என்பது ஒரு பள்ளியின் எதிர்காலம் குறித்து உறுதியான முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளிச் சமூகத்துக்கு மிக நீண்ட காலமாகும்.
இந்த நீண்டகாலத் தாமதத்திற்கு ஜொகூர் மாநில நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த 2017ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜொகூர் மாநில அரசிதழின் அறிவிப்பு எண் 2652-இன்படி, 1960ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் 8ஆவது பிரிவின் கீழ், மலேசியக் கல்வி அமைச்சுக்காகப் புதிய பள்ளி வளாகத்தை அமைப்பதற்கு 1.210 ஹெக்டேர் நிலம் குளுவாங் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கான நோக்கமும் இடமும் 2017ஆம் ஆண்டிலேயே உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வரை எந்தத் தடைகள் காரணமாக நில உரிமை தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடையவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வியமைச்சு நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்திவிட்டதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நில உரிமையை இறுதிப்படுத்தும் நடவடிக்கையை மாநில அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
நில அலுவலகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து பள்ளிச் சமூகத்திற்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் இன்று மக்களவையில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினராலும் எழுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய முக்கியமான பிரச்சினைக்கு உரிய கவனம் கிடைக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக ஜொகூர் மாநில மந்திரி பெசார் உடனடியாகத் தலையிட்டு, குளுவாங் நில அலுவலகத்திடம் தற்போதைய நிலவர அறிக்கையையும், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கால அட்டவணையையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 1:10 pm
Waze செயலியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது
October 21, 2026, 1:09 pm
தெராசா கோக் வழக்கின் அபராதத்தை செலுத்த அக்மால் மோட்டார் சைக்கிள், தலாபியா மீனை ஏலத்தில் விடுகிறார்
October 21, 2026, 1:07 pm
மலேசியா-சிங்கப்பூர் விபச்சார கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது: டத்தோ குமார்
October 21, 2026, 1:06 pm
மறு அறிவிப்பு வரும் வரை ஷுஹாய்லி பணியை தொடர்வார்: வழக்கறிஞர்
October 21, 2026, 1:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் இடை நீக்கத்தை பெர்சத்து கட்சி உறுதி செய்தது
October 21, 2026, 11:33 am
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 21, 2026, 10:41 am
முகமது ஷுஹாய்லி குற்றத்தை மறுத்தார்
October 21, 2026, 9:50 am
