நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டத்தால் அடுத்த வாரமும் ஜொகூரில் பள்ளிகள் மூடப்படும்: ஆட்சிக் குழு உறுப்பினர்

ஜொகூர்பாரு:

அக்டோபர் 19 முதல் 23 வரை மேலும் ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூடுவதை தொடர ஜொகூர் அரசு முடிவு செய்துள்ளது.

காற்றின் தர நிலைகள், வானிலை முன்னறிவிப்புகள், தற்போதைய சுகாதார மதிப்பீடுகளைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில கல்வி, தகவல் குழுவின் தலைவர் டாக்டர் முஹம்மது நாகிப் முகமது கசாலி தெரிவித்தார்.

புகைமூட்டச் சூழல், காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜோஹோரில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதற்கான இந்த முடிவுக்கு, ஜொகூரில் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் ஒப்புதல் அளித்துள்ளார்.

அவர் எப்போதும் ஒட்டுமொத்த ஜொகூர் மக்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வை வலியுறுத்துகிறார்.

இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற ஜொகூர் மாநில புகைமூட்ட மேலாண்மை ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset