நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு ஆபாசப் புகைப்படங்களால் இடைநிலைப் பள்ளி மாணவி பாதிப்பு: போலிஸ்

சிரம்பான்:

ஒரு இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் புகைப்படங்கள், ஆபாசப் புகைப்படங்களைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டது தொடர்பாக ஐந்து புகார்களைக் போலிஸ் பெற்றுள்ளது.

14 முதல் 17 வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புகார்களை, ஆகஸ்ட் 20 முதல் 23 வரை அவர்களது பெற்றோர், பாதுகாவலர்களிடமிருந்து தனது துறை பெற்றதாக நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத் கூறினார்.

இந்த வழக்கில், ஐந்தாம் படிவ மாணவரான சந்தேக நபர் மீது, பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது, ஆகஸ்ட் 24 முதல் 28 வரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை, ஐந்து சாட்சிகள் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 5, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292 ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக, போலிஸ் ஒரு வெளிப்படையான விசாரணையை நடத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset