செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என மஇகா நம்பிக்கை கொண்டுள்ளது.
அனைத்து இன வாக்காளர்களிடமிருந்தும் தேசிய முன்னணிக்கு அதிகரித்து வரும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கை இருப்பதாக மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
அதே நேரத்தில், மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு தேசிய முன்னணி வேட்பாளருக்கும் உதவுவதற்காக மஇகா தனது தேர்தல் கேந்திரத்தை வலுப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
மஇகா தேர்தல் கேந்திரம் தயாராக உள்ளது. மஇகா இளைஞர் பிரிவு தனது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
அதே சமயம், மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி வேட்பாளர்களுக்குப் பல்வேறு பிரிவுகள் உதவி வருகின்றன.
மலாக்கா மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக, நானே நாளை களத்திற்குச் செல்வேன் என்று அவர் கூறினார்.
தாப்பாவில் சுமார் 2,000 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கும் விழாவில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 11:04 pm
மலாக்கா மாநில தேர்தல்; தேசிய முன்னணி 21 வேட்பாளர்களை அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கும்: அப்துல் ரவுஃப்
October 17, 2026, 11:03 pm
புகைமூட்டத்தால் அடுத்த வாரமும் ஜொகூரில் பள்ளிகள் மூடப்படும்: ஆட்சிக் குழு உறுப்பினர்
October 17, 2026, 11:02 pm
நிக் நஸ்மியின் கைது நடவடிக்கையை கெஅடிலான் திட்டமிடவில்லை: அமிரூடின்
October 17, 2026, 11:00 pm
தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு வழி: டத்தோஸ்ரீ ரமணன்
October 17, 2026, 10:59 pm
செயற்கை நுண்ணறிவு ஆபாசப் புகைப்படங்களால் இடைநிலைப் பள்ளி மாணவி பாதிப்பு: போலிஸ்
October 17, 2026, 10:58 pm
பெர்சாமா கட்சியின் அனைத்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளிலிருந்தும் நிக் நஸ்மிக்கு 3 மாதங்களுக்கு இடைநீக்கம்
October 17, 2026, 10:57 pm
சுங்கைபூலோ தொகுதி மக்களின் வற்றாத ஆதரவு நம்பிக்கையை அளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 17, 2026, 12:47 pm
