நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு வழி: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கை பூலோ:

வெறும் காகித அளவிலான கொள்கைகளால் மட்டும் பயனில்லாது, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் உண்மையான வளர்ச்சியும் தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தான் தங்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நியாயமான ஊதியம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பட்ட வேலைவாய்ப்புச் சூழல் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அலுவலக அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் மட்டுமே நம்பியிராமல், களத்திற்குச் சென்று மக்களின் உண்மையான தேவைகளை நேரடியாகக் கேட்டறிவதே 'மடானி' அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மட்டும் இருக்கக் கூடாது; மாறாக, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா, அவர்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்கிறதா என்பதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது என்றார் அவர்.

வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை, இளைய சமுதாயத்தினருக்குத் தற்காலத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களை ஊட்டுவதும், ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தங்களைத் தற்காலச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதும் அவசியமானதாகும் என்று ரமணன் சுட்டிக்காட்டினார்.

மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலில் வெறும் கல்வித் தகுதிகள் மட்டுமே போதாது என்றும், நடைமுறைத் திறன்களும் தொழில்நுட்ப அறிவும் இன்று மிகவும் அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset