நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முன்னாள் லிவர்பூல் கோல்காவலர் காரியஸ் குடும்பத்தினருக்கு மரண அச்சுறுத்தல்கள்

லண்டன்:

கீவ் நகரில் நடைபெற்ற 2018 சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டிடம் லிவர்பூல் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக முன்னாள் லிவர்பூல் கோல்காவலர் லோரிஸ் காரியஸ் தெரிவித்துள்ளார்.

காரியஸ் 2016இல் லிவர்பூல் அணியில் இணைந்தார்.

ஆரம்பத்தில் அவர் அந்த அணியின் நீண்டகால முதல்நிலை கோல்கீப்பராகக் கருதப்பட்டார்.

2016/17 சீசனில் அனைத்துப் போட்டிகளிலும் 16 முறை களமிறங்கிய அவர், 2017/18 சீசனில் சாம்பியன்ஸ் லீக்கில் 13 போட்டிகள் உட்பட மொத்தம் 33 முறை விளையாடினார்.

இருப்பினும், ரியல்மாட்ரிட்டுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்த ஜெர்மன் கோல்காவலரின் விளையாட்டுப் பாதை மாறியது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

பின்னர், 48ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் தடுப்பாட்ட வீரர் செர்ஜியோ ராமோஸ், காரியஸை முழங்கையால் தாக்கினார்.

பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், அந்த கோல்காவலருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டிருந்தது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset