செய்திகள் விளையாட்டு
ரொனால்டோ வரவிரும்பினால் வரலாம்: மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயிற்சியாளர் ஜீசஸ்
லிஸ்பன்:
போர்த்துகல் அணியில் ரொனால்டோவின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
அணிக்கு திரும்ப விரும்பினால் அவர் தேர்வாகலாம் என்றாலும், முந்தைய சாதனைகள் தனிப்பட்ட சலுகைகளை வழங்காது என அவர் கூறினார்.
ரொனால்டோவின் முடிவுகள், ஜீசஸின் நிலைப்பாடு அணியின் எதிர்காலத்தை சிக்கலாக்கியுள்ளது.
சமீபத்தில் போர்த்துக்கல் தேசிய அணியிலிருந்து தான் விலக விரும்புவதாகவும், அதற்கான காரணம் என்ன என்பதை நான் விரைவில் கூறுவேன் என்றும் நட்சத்திர கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பகிரங்கமாக அறிவித்தார்.
அடுத்த வாரம் அவர் தன்னுடைய விளக்கத்தை செய்தியாளர் சந்திப்பில் கொடுக்கவிருக்கிறார்.
பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுக்கும், ரொனால்டோவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தசூழலில் மீண்டும் போர்த்துக்கல் தேசிய அணிக்கு ரொனால்டோ திரும்புவாரா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் பயிற்சியாளர் ஜீசஸ்,
ரொனால்டோ அணிக்கு மீண்டும் திரும்ப விரும்பினால், அடுத்த சர்வதேச போட்டிகளுக்கான அணியில் அவர் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அவர் தனது கால்பந்து வாழ்க்கையை எப்படி முடிக்கவேண்டும் என்பதை அவரேதான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் முடிவு எடுக்க எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
- பாத்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 9:09 am
மென்செஸ்டர் சிட்டி ஒற்றுமையாக இருக்க வேண்டும்: ஹாலண்ட் வலியுறுத்துகிறார்
October 8, 2026, 9:39 am
அர்ஜெண்டினா ஜெர்சியை நினைத்து ஏங்குவதாக மெஸ்ஸி ஒப்புக்கொண்டார்
October 8, 2026, 9:37 am
மெஸ்ஸியின் கால்பந்து மரபுக்கு ரொனால்டோ மரியாதை செலுத்துகிறார்
October 7, 2026, 4:40 pm
கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: கடைசி ஆட்டத்திலும் கோல்
October 7, 2026, 9:20 am
இங்கிலாந்து அணிக்காக 125ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய ஹாரி கேய்ன் இரண்டு கோல்களுடன் கொண்டாடினார்
October 7, 2026, 8:51 am
ஜேசுஸ் மீதான ஏமாற்றம் இருந்தபோதிலும் ரொனால்டோ போர்த்துகல் அணிக்கு விசுவாசமாக இருக்கிறார்
October 6, 2026, 9:17 am
தோல்வியடையாத பயணம் ஹரிமாவ் மலாயா அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது
October 6, 2026, 9:14 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
October 5, 2026, 12:28 pm
