நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் சிட்டியின் நிதி வழக்கை மதிக்க வேண்டும்: அர்தெத்தா

கோலாலம்பூர்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் நிதி விதிமுறைகளை கடுமையாக மீறியதாக மென்செஸ்டர் சிட்டி அணி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து தரப்பினரும் சட்ட நடைமுறையை மதிக்க வேண்டும்.

அர்செனல் மேலாளர் மைக்கல் அர்தெத்தா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரத்தின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து சிட்டியின் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாகியுள்ளது.
அந்த அணி பெரும் புள்ளிக் குறைப்பு, அபராதம் அல்லது இங்கிலாந்தின் உயர்மட்ட லீக்கிலிருந்து தரம் இறக்கம் ஆகியவற்றை எதிர்கொள்கிறது.

இருப்பினும், அபுதாபியை ஆதரிக்கும் அந்த அணி, தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று வலியுறுத்துவதோடு,

2009-10 முதல் 2017-18 வரையிலான பருவ காலப்பகுதியை உள்ளடக்கிய இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

அர்தெத்தா, 2016 முதல் மூன்று ஆண்டுகள் சிட்டியின் முன்னாள் மேலாளர் பெப் கார்டியோலாவின் உதவியாளராக இருந்தார்.

பின்னர், அவர் ஒரு காலத்தில் கேப்டனாக இருந்த அர்செனல் அணியில் சேருவதற்காக மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset