நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆர்ஓஎஸ் முடிவை எதிர்த்து தேசியக் கூட்டணி சட்ட நடவடிக்கை எடுக்கும்: தக்கியூடின்

கோலாலம்பூர்:

காரணம் காட்டுவதற்கான காலக்கெடுவிற்குப் பிறகு, கூட்டணியின் செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்த சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) முடிவையும், அதன் பதிவை ரத்து செய்வதற்கான முன்மொழிவையும் எதிர்த்து தேசியக் கூட்டணி சட்ட நடவடிக்கை எடுக்கும்.

அதன் பொதுச் செயலாளர், டத்தோஶ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.

அந்த முடிவின் அடிப்படையை தேசியக் கூட்டணி ஏற்கவில்லை. கிடைக்கக்கூடிய சட்ட செயல்முறைகள் மூலம் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

சங்கங்கள் சட்டம் 1966-இன் துணைப்பிரிவு 13(2)-இன் கீழ், அதன் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணங்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கும் ஒரு அறிவிப்பை தேசியக் கூட்டணி பெற்றுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

மேற்கூறியஆர்ஓஎஸ் முடிவை தேசியக் கூட்டணி கவனத்தில் கொள்கிறது. ஆனால் அந்த முடிவின் அடிப்படையை ஏற்கவில்லை.

மேலும் கிடைக்கக்கூடிய சட்ட செயல்முறைகள் மூலம் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset