செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன; ரத்து செய்யப்படவில்லை: ஆர்ஓஎஸ்
புத்ராஜெயா:
சங்கங்களின் பதிவுத் துறை (ஆர்ஓஎஸ்) தேசியக் கூட்டணியின் அனைத்து செயல்பாடுகளும் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று ஆர்ஓஎஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தேசியக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் (சட்டம் 832) துணைப்பிரிவு 13(2ஏ)-க்கு இணங்க இந்த இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெர்சத்து கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த அறிவிப்பு தேசியக் கூட்டணியை கேட்டதாக ஆர்ஓஎஸ் கூறியது.
ஆர்ஓஎஸ் 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் துணைப்பிரிவு 13(2)-க்கு இணங்க, செப்டம்பர் 22, 2026 தேதியிட்ட ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பிற்குப் பதிலளிக்க தேசியக் கூட்டணிக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பெர்சத்துவால் ஆர்ஓஎஸிடம் தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக பிஎன் விளக்கம் அளிக்குமாறு கோருவதே இந்த அறிவிப்பின் நோக்கமாகும்.
மேலும் இது பதிவை ரத்து செய்வதற்கான முடிவு அல்ல என ஆர்ஓஎஸ் விளக்கியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 24, 2026, 11:56 am
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான அரசியல் ஒத்துழைப்பை தேசிய முன்னணி விரைவில் அறிவிக்கும்: ஜம்ரி
September 24, 2026, 11:30 am
சரவாக் செரியானில் IPU மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 24, 2026, 11:22 am
ஈப்போ பெரிய சந்தையின் கட்டிடத்திலிருந்து ஆடவர் விழுந்து உயிரிழப்பு
September 24, 2026, 11:00 am
ரோஹிங்கியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கும் திட்டத்தை ஜேபிஜே மறுத்தது
September 24, 2026, 10:58 am
ரயில் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறால் கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவை தாமதம்
September 24, 2026, 10:57 am
ஆர்ஓஎஸ் முடிவை எதிர்த்து தேசியக் கூட்டணி சட்ட நடவடிக்கை எடுக்கும்: தக்கியூடின்
September 23, 2026, 10:43 pm
பதிவை ரத்து செய்வது தொடர்பாக ஆர்ஓஎஸ் தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பியது
September 23, 2026, 10:42 pm
