நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஹிங்கியர்களுக்கு  ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கும் திட்டத்தை ஜேபிஜே மறுத்தது

கோலாலம்பூர்:

நாட்டில் ரோஹிங்கியா இனக் குழுவினர் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கும் திட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான அறிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) கடுமையாக மறுக்கிறது.

இன்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம், "அலாங் ஆட்டோ பார்ட்ஸ்" என்ற முகநூல் கணக்கு வழியாகப் பரப்பப்பட்ட, அதிகாரப்பூர்வ செய்தி போல் தோற்றமளிக்கும் "JPJ Cadang Benarkan Rohingya Amilb Lesen Memandu" என்ற தலைப்பிலான தவறான பதிவை ஜேபிஜே கடுமையாகச் சாடியுள்ளது.

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் அளவிற்குத் துறையின் பெயர், அடையாளம் அல்லது அதிகாரப்பூர்வப் பிம்பத்தைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்கும், மாற்றியமைக்கும் அல்லது பரப்பும் எந்தவொரு தரப்பினரின் நடவடிக்கைகளையும் துறை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது என்று ஜேபிஜே வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பொறுப்பற்ற செயல், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரையும் கடுமையாகப் பாதிக்கிறது எனக் கருதப்படுகிறது.

சம்பந்தப்பட்ட, சரிபார்க்கப்படாத தகவல் பரவியதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணை மற்றும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, ஜேபிஜே, எம்சிஎம்சியிடம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பாக, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், எந்தவொரு சமூக ஊடகத் தளத்திலும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாத எந்தவொரு தகவலையும் விநியோகிக்கவோ அல்லது பரப்பவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset