நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ பெரிய சந்தையின் கட்டிடத்திலிருந்து ஆடவர் விழுந்து உயிரிழப்பு

ஈப்போ: 

நேற்று ஈப்போவில் உள்ள ஜாலான் லக்சாமானா பகுதியில் அமைந்துள்ள ஈப்போ பெரிய சந்தையின் கட்டிடத்திலிருந்து ஆடவர் ஒருவர் விழுந்து உயிரிழந்தார் 

இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் முஹம்மத் நஜிப் ஹம்சா கூறினார் 

உயிரிழந்தவர் 29 வயதுடைய உள்ளூர் ஆடவர் என்றும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்

உடற்கூறு ஆய்வுக்காக காலை 10.30 மணிக்கு பிரேதம் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார் 

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாரும் எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அது போலிஸ் விசாரணையைப் பாதிக்க செய்யும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் 

பொதுமக்கள் ஏதேனும் விபரங்கள் கொண்டிருந்து அதனை தெரிவிக்க வேண்டுமென்றால் அருகிலுள்ள போலிஸ் நிலையத்திலோ அல்லது ஈப்போ மாவட்ட போலிஸ் தலைமையகத்தையோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset